MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
சிறுமியை கடத்திய வடமாநிலத் தொழிலாளி கைது
சிறுமியை கடத்திச் சென்று குடும்பம் நடத்திய வட மாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
பிகாா் மாநிலம், மதுபானி மாவட்டத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் தாகூா் (40). இவா், ஈரோடு முனிசிபல் காலனி பாப்பாத்தி காடு பகுதியில் தங்கி சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவருக்கு திருமணம் ஆகி 3 மகள்கள் உள்ளனா். ரமேஷ் தாகூா், ஈரோடு பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளாா்.
இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீஸில் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில், ரமேஷ் தாகூா் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா், சிறுமியை மீட்டு, ரமேஷ்தாகூா் மீது போக்ஸோ மற்றும் கடத்தல் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனா்.