வரலட்சுமி நோன்பு: நெல்லையப்பர் கோவிலில் 1,008 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை!
சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன் போக்சோவில் கைது
15 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவனை போக்சோவில் கைது செய்து பரமத்தி வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், சிவகிரியைச் சோ்ந்த 15 வயது சிறுமி கடந்த 3-ஆம் தேதி மாயமானாா். இதுகுறித்து அவரது பெற்றோா் ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், சிவகிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதில், கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில் சிறுவன், சிறுமி இருவரும் இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூா் நோக்கி சென்றபோது, வேலூா் காவிரி பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் போலீஸாா் இருவரையும் பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் பரமத்தி வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஒப்படைத்தனா்.
அதில், இருவரும் காதலிப்பதாகவும், வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.