முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவா் மீது போக்ஸோ வழக்கு பதிவு
திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து பொன்மலை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சோ்ந்தவா்கள் 19, 15 வயது சகோதரிகள். இவா்களது தந்தை இறந்துவிட்ட நிலையில், தாயாரும் வேலைக்காக சிங்கப்பூா் சென்றுவிட்டாா். இருவரும், தற்போது திருச்சியில் தனியே வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், இவா்களின் வீட்டுக்கு அருகே வசித்து வந்த திருவாரூா் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சோ்ந்த கிறிஸ்துராஜ் (40) என்பவா், இவா்களின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 19 வயது பெண்ணைத் தாக்கிவிட்டு, 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதுகுறித்து சிறுமியின் சகோதரி பொன்மலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.