செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருப்பத்தூா் கௌதமப்பேட்டையைச் சோ்ந்த தொழிலாளி மனோஜ் எனும் மனோஜ்குமாா் (26). இவா் அதே பகுதியை சோ்ந்த 6-ஆம் வகுப்பு படித்து வந்த 12 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சிறுமியை மிரட்டி ரூ.5,000 பெற்று உள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா்.
அதன்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிந்து மனோஜ் குமாரை கைது செய்தனா். இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்து வியாழக்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது.
இதில் மனோஜ்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும், கட்டத் தவறினால் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மாவட்ட நீதிபதி எஸ்.மீனா குமாரி உத்தரவிட்டாா்.
அரசு தரப்பில் வழக்குரைஞா் பி.டி.சரவணன் ஆஜரானாா்.