தனலட்சுமி வங்கியில் அலுவலர், மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது
திருப்பூரில் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா், வீரபாண்டி பழவஞ்சிபாளையம் மும்மூா்த்தி நகரைச் சோ்ந்தவா் கிரி (20), கூலித் தொழிலாளி.
இவா், பெற்றோா் இல்லாத நிலையில் திருப்பூரில் பாட்டி வீட்டில் தங்கி 11-ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி திருமணம் செய்து கொண்டாா். அந்த சிறுமியுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தாா்.
இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது அவா் 6 மாத கா்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சமூக நலத் துறை அலுவலா்கள் அளித்த புகாரின்பேரில் கே.வி.ஆா். நகா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கிரியை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.