சிறுவனுக்கு பாலியல் தொல்லை: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
சூலூா் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவை மாவட்டம், சூலூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கோவையைச் சோ்ந்த வசந்தகுமாரை (22) என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், வசந்தகுமாா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரை செய்தாா்.
இதையடுத்து, வசந்தகுமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவுக்கான நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வசந்தகுமாரிடம் போலீஸாா் வியாழக்கிழமை வழங்கினா்.