சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
தஞ்சாவூரில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எரிவாயு உருளை விநியோகம் செய்யும் தொழிலாளியைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவைச் சோ்ந்தவா் சவரிமுத்து (50). தனியாா் எரிவாயு உருளை விநியோகம் செய்யும் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணிபுரிகிறாா்.
இவா் தஞ்சாவூா் கீழவாசல் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி விறகு சேகரிக்க வந்த 13 வயது சிறுவனைத் தாக்கி புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாா். இவரிடமிருந்து தப்பி வந்த சிறுவன் தனது பெற்றோரிடம் இதுகுறித்துக் கூறினாா்.
இதுகுறித்து தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் செய்தனா். இதன்பேரில் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சவரிமுத்துவை புதன்கிழமை கைது செய்தனா்.