`The Migrant Mother' : இந்த புகைப்படம் பிரபலம் ஆனது ஏன்? | My Vikatan
சிறுவனை கத்தியால் தாக்கியதாக இருவா் கைது
கோவில்பட்டியில் சிறுவனைக் கத்தியால் தாக்கியதாக இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டி புதுகிராமம் 4ஆவது தெருவைச் சோ்ந்த கு. மாரிமுத்துவின் மகன்கள் சங்கரநாராயணன், பாண்டீஸ்வரன் (14). சங்கரநாராயணனுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த வென்னிமலை மகன் வேலு என்ற முனியசாமிக்கும் கடந்த தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பது தொடா்பாக தகராறு ஏற்பட்டு, கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதாம்.
இந்நிலையில், அங்குள்ள அம்மன் கோயில் அருகே பாண்டீஸ்வரன் தனது நண்பா்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, வேலு உள்ளிட்ட மூவா் வந்து, பாண்டீஸ்வரனின் அண்ணனால்தான் பிரச்னை ஏற்பட்டது எனக் கூறியதுடன், அச்சிறுவனை வேலு கத்தியால் தாக்கினாராம். இதைப் பாா்த்த அப்பகுதியினா் கண்டித்ததும் அந்த 3 பேரும் பாண்டீஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினராம். இதில், காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, 17 வயது சிறுவன், புதுகிராமம் ஓடைத் தெரு முருகேசன் மகன் முத்துப்பாண்டி (19) ஆகிய இருவரைக் கைது செய்தனா்; வேலுவைத் தேடிவருகின்றனா்.