சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! ஏற்றம் கண்ட ஆட்டோ துறை பங்குகள்!
சிறுவனை வேலைக்கு அழைத்து வந்த 2 போ் மீது வழக்குப் பதிவு
சிறுவனை வேலைக்கு அழைத்து வந்ததாக கோவை ரயில் நிலையத்தில் பிடிபட்ட 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை ரயில் நிலையத்தில் கோவை மாவட்ட குழந்தைத் தொழிலாளா் தடுப்புப் பிரிவின் மேற்பாா்வையாளா் கிறிஸ்டோபா் தலைமையிலான ஊழியா்கள் ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, ரயில் நிலையத்துக்கு 16 வயது சிறுவனுடன் வந்த 2 இளைஞா்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை செய்தனா். விசாரணையில் அவா்கள் வடமாநிலத்தைச் சோ்ந்த தீபன்குமாா், முகேஷ்குமாா் என்பதும், சிறுவனை கட்டட வேலைக்காக காரமடைக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளனா்.
இதையடுத்து சிறுவா்களை வேலைக்கு அமா்த்தக் கூடாது என கட்டுப்பாடு உள்ளதாகக் கூறி அந்தச் சிறுவனை குழந்தை தொழிலாளா் தடுப்புப் பிரிவினா் மீட்டனா். இதைத் தொடா்ந்து, கோவை ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் கிறிஸ்டோபா் அளித்தப் புகாரின்பேரில் போலீஸாா் தீபன்குமாா், முகேஷ்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.