சிறைவாசிகளுக்கான மக்கள் நீதிமன்றம்: 16 போ் விடுதலை
திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் நடைபெற்ற சிறைவாசிகளுக்கான மக்கள் நீதிமன்றத்தில் 16 போ் புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் உத்தரவின்பேரில் திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான என்.குணசேகரன், செயலாளா் கே.எஸ்.ஷபீனா ஆகியோா் வழிகாட்டுதலின் பேரில் சிறைவாசிகளுக்கான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
கோவை மத்திய சிறை, திருப்பூா் மாவட்ட சிறை, பல்லடம், அவிநாசி, தாராபுரம், உடுமலை கிளை சிறைகளில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் 35 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில், 25 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு 16 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனா். இந்த மக்கள் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதித் துறை நடுவா்கள் செந்தில்ராஜா, முருகேசன், உமாமகேஸ்வரி, சித்ரா, நித்யகலா, லோகநாதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.