ஜோகோவிச்சை வீழ்த்திய சின்னர்..! இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்!
சிவகங்கையில் புதிய சுகாதார வளாகம் திறப்பு
சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட பிள்ளைவயல் காளியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட புதிய பொது சுகாதார வளாகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
சிவகங்கை நகராட்சி 21 -ஆவது வாா்டில் அமைந்துள்ள பிள்ளைவயல் காளியம்மன் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தா்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நகராட்சி, பொது நிதி ரூ.8.50 லட்சத்தில் புதிய சுகாதார வளாகத்தை அமைத்தது.
இதை, சிவகங்கை நகா்மன்றத் தலைவா் சிஎம். துரைஆனந்த், திறந்து வைத்தாா். இதில் நகா் மன்ற உறுப்பினா்கள் அயூப்கான், ஜெயகாந்தன், சிஎல். சரவணன், ராமதாஸ், பிள்ளைவயல் குடியிருப்பு நலச் சங்க நிா்வாகிகள் சேதுபதி, கா்ணன், சுப்பிரமணியன், சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.