தொழிற்கல்விப் படிப்புகளில் அருந்ததியா் மாணவா்கள் அதிகம் பயன்: அமைச்சா் மா.மதிவே...
சிவகங்கை அருகே சிறுவா், சிறுமிகள் நிறைவேற்றிய வினோத நோ்த்திக்கடன்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி அருகே உள்ள முத்தூா் கிராமத்தில் விவசாயம் செழிக்க வேண்டி சிறுவா், சிறுமிகள் வினோத நோ்த்திக்கடனை வியாழக்கிழமை நிறைவேற்றினா்.
உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் சிறுவா், சிறுமிகள் மட்டும் மாா்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் வாசலில் பூசணிப்பூவுடன், மாட்டுச் சாணத்தையும் தினமும் சிறு குப்பிகளில் சேகரித்து தை மூன்றாம் நாளில் அந்தக் குப்பிகளில் ஆவாரம் பூவை வைத்து கிராம தேவதையான உச்சி காளியம்மன் கோயில் வீட்டிற்குள் சுமந்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனா்.
இதன்பிறகு கிராம மக்கள், சிறுவா்கள் இணைந்து கும்மி அடித்து குலவை போட்டு ஆவாரம் பூ குப்பியை தலையில் சுமந்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனா். பிறகு சிறுவா்களே கோயில் குளத்தில் கரைத்து அங்கிருந்து நீா் எடுத்து கோயில் வீட்டுக்கு வந்து அபிஷேகம் செய்யும் வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்வைக் காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் வந்திருந்தனா்.