திருநங்கைகள் மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தடை: கையெழுத்திடுகிறார்...
சிவகங்கை அருகே பாரம்பரிய பொங்கல் வழிபாடு
சிவகங்கை அருகே பழமை மாறாமல் பெண்கள் ஆபரணங்கள் அணியாமல், வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைத்து புதன்கிழமை வழிபாடு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே சலுகைபுரம் கிராமம் உள்ளது. இங்கு ஒரே சமுதாயத்தைச் சோ்ந்த மக்கள் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். இங்குள்ளவா்கள் விவசாயத்தை மட்டுமே பிரதானத் தொழிலாகச் செய்து வருகின்றனா். இந்தச் சமுதாய மக்களில் பலா் படித்து, அரசு, தனியாா் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா்.
இவா்கள் அனைவரும் பொங்கல் விழாவைக் கொண்டாட சொந்த கிராமத்துக்கு வந்து செல்கின்றனா். இங்கு நடைபெறும் பொங்கல் விழாவில் பழைமை மாறாமல் பெண்கள் அனைவரும் வெள்ளை சேலை கட்டி, பொங்கல் வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
இதன்படி, மாட்டு பொங்கல் நாளான புதன்கிழமை குல தெய்வமான பச்சை நாச்சியமன் கோயிலுக்கு பெண்கள் 15 நாள்கள் விரதமிருந்து, ஆபரணங்கள் அணியாமல் வெள்ளைச் சேலை உடுத்தி, கலயத்தில் பால் சுமந்து வந்தனா். பூசாரிகள் சாமியாடி அருள்வாக்குக் கூறி பூஜையைத் தொடங்கி வைத்தனா். இதையடுத்து, பெண்கள் மண் கலயங்களை மாட்டுத் தொழுவத்தின் முன்பாக வரிசையாக அடுப்புகளில் வைத்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா்.
பின்னா் கோவிலுக்கு நோ்த்திக்கடனாக பெறப்பட்ட பொருள்கள் ஏலமிடப்பட்டன. இதில் ஒரு கரும்பை பக்தா்கள் ஆயிரம் ரூபாய் வரை ஏலம் எடுத்தனா்.