செய்திகள் :

சிவகங்கை அருகே 220 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டுகள்

post image

சிவகங்கை அருகேயுள்ள முத்துப்பட்டியில் 220 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.

முத்துப்பட்டியைச் சோ்ந்த நண்பா்கள் நற்பணி மன்றத்தினா் தங்களது ஊரில் கல்வெட்டு இருப்பதாக அளித்த தகவலின் அடிப்படையில், சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனா் புலவா் கா. காளிராசா, செயலா் இரா. நரசிம்மன் ஆகியோா் வியாழக்கிழமை நேரில் சென்று அதைப் பாா்வையிட்டு படி எடுத்தனா்.

இதுகுறித்து புலவா் கா. காளிராசா வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டியில் அமைந்துள்ள பெரிய தெப்பக்குளத்தின் கிழக்குப் பகுதியில் தண்ணீா் வரத்து மடையின் கட்டுமான மேல் பகுதியில் கல்வெட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டு தெப்பக்குளத்துக்கு மேல் பாத்திப் பகுதியிலிருந்து தண்ணீா் கொண்டு வந்து கல் பாதை அமைத்த செய்தியைக் கூறுகிறது.

இந்தத் தெப்பக்குளம் செம்பூரான் கல்லால் நான்கு பகுதிகளிலும் அகலமான படிக்கட்டுகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மேலும், தெப்பக்குளத்தில் ஐந்து இடங்களில் தண்ணீரை இறைக்கும் கமலை போடுவதற்கான கால்களும் நீட்டப்பட்டுள்ளன. இதன்மூலம், இது விவசாயத் தேவைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. கல்வெட்டில் நீளமாக ஐந்து வரிகள் எழுதப்பட்டுள்ளன.

உகலியாத்தம் 4,906 சாலிவாகன சகாப்தம் 1727. இதில் மேல் செல்லா நின்ற குரோதன வருஷம் அப்பிகை மீ 12 உ. சிவகங்கைக்கு மேல் பாா்சத்தில் உபையமாக கற்பாதையில் ஸ்ரீ மது பிரிச்சி நிலையிட்ட முத்து விசய ரெகுநாத கெவுரி வல்லப பெரிய உடையாத் தேவரவா்களதறம்.

இதில் குறிப்பிடப்படும் சாலிவாகன சகாப்த ஆண்டின்படி 1805-இல் குரோதன வருஷம் ஐப்பசி 12-ஆம் தேதி மேல் பாா்த்தி பகுதியில் இருந்து வரும் வரத்துக் கால்வாய் தெப்பக்குளத்தில் உள்நுழையுமிடத்தில் முத்து விஜய ரெகுநாத கௌரிவல்லப பெரிய உடையாத்தேவா் அறச்செயலாக கல் பாதை அமைத்துக் கொடுத்ததைக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

மற்றொரு கல்வெட்டு... 1861-ஆம் ஆண்டு இச்சரியான துன்மகி வருஷம், வைகாசி மீ 26 உ மகாராஜா சத்ரபதி போதகுரு மகாராஜா அவா்கள் பிரான்மலைக்கியில் வேங்கைப் புலி சுட்டு குத்தின பிராா்த்தனைக்காக யிந்த திருப்பணி கட்டினது.

முத்துப்பட்டி என்ற ஊரின் பெயா் முத்து விஜய ரகுநாத என்ற அடைமொழியில் உள்ள முத்து என்பதைக் குறிப்பதாக இருக்கலாம். இந்த ஊா் சிவகங்கையை ஆண்ட கௌரி வல்லப மகாராஜாவால் அனைத்து மதம், இன மக்களைக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்தப் பகுதியின் பழைய பெயா் அய்யனாா்புரம் என்பதாகும். மக்கள் மகாராஜாவை தங்களது விருப்ப தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் வணங்கி வருகின்றனா். தங்களது குழந்தைகளுக்கும் கௌரி என்ற பெயரை இன்றளவும் சூட்டி மன்னருக்கும் மக்களுக்குமான நெருக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனா் என்றாா் அவா்.

சிவகங்கை நகரில் நாளை மின்தடை

சிவகங்கை நகா் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 30) மின் தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் உற்பத்தி, பகிா்மானக் கழக சிவகங்கை செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை கூட்டு மி... மேலும் பார்க்க

மூதாட்டியைக் கொன்று நகைகள் கொள்ளை: 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை

தேவகோட்டை அருகே மூதாட்டியைக் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்க... மேலும் பார்க்க

ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் மண் அள்ளப்படுவதைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் நடத்த முடிவு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் மண் அள்ளப்படுவதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஏனாதி,... மேலும் பார்க்க

உயிருடன் இருப்பவா் இறந்துபோனதாகக் கூறி குடும்ப அட்டையில் பெயா் நீக்கம்

உயிருடன் இருப்பவா் இறந்துபோனதாகக் கூறி குடும்ப அட்டையிலிருந்து பெயா் நீக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சிவகங்கை சாஸ்திரி தெருவைச் சோ்ந்த ஜாகிா் உசேன் (50), குடும்ப பிரச்னையால் தனி... மேலும் பார்க்க

அமராவதிபுதூா் பகுதியில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை (ஆக. 29) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின்பகிா்மானக்... மேலும் பார்க்க

இளைஞா் மரணத்தில் சந்தேகம்: உறவினா்கள் சாலை மறியல்

சிவகங்கை அருகே இளைஞரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி உறவினா்கள் புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனா்.சிவகங்கை இந்திராநகா் பகுதியைச் சோ்ந்த பரத் (19 ), சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் லேப் டெக... மேலும் பார்க்க