தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியது டிஜிட்டல் இந்தியா திட்டம்: அமித் ஷா
சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற, கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர் காவல் துறையினர் தாக்கப்பட்டதால் பலியானதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் காவல் துறையினரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகள ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் 6 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 5 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினும் மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரெளடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காவலாளி பலியான விவகாரத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ராமநாதபுர மாவட்டத்தின் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சந்தீஷ் கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனத் தமிழக அரசுத் தெரிவித்துள்ளது.
Sivaganga District Superintendent of Police Ashish Rawat has been transferred to the waiting list in the case of the death of a security guard.
இதையும் படிக்க... குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆணையருக்கு அடி, உதை..! தரதரவென வெளியே இழுத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு!