சிவகாசி அருகே பட்டாசு விபத்து: இருவர் பலி!
சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் பட்டாசு ஆலையில் இன்று(சனிக்கிழமை) காலை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.