செய்திகள் :

சிவகார்த்திகேயன்: ``அம்மா என்றழைக்காத உயிரில்லையே..'' - அம்மா பிறந்தநாளில் நெகிழ்ந்த சி.கா!

post image

நடிகர் சிவகார்த்திகேயன் அவரது தாய் ராஜி தாஸ் பிறந்தநாளில் அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அவரது சமூக வலைத்தள பக்கங்களில்,

"அடுத்திங்கு பிறப்பொன்று
அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே" என க்ளாசிக்கல் சென்டிமெண்ட் பாடலான 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' பாடலின் வரிகளைப் பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் அவரது அம்மா மீது அதீத அன்பும் மரியாதையும் கொண்டிருப்பதை பல்வேறு தளங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவர் 17 வயதிலேயே காவல்துறை பணியிலிருந்த அவரது தந்தை மரணமடைந்ததால், அம்மா ராஜிதான் அனைத்து குடும்ப விவகாரங்களையும் கவனித்துக்கொண்டுள்ளார். அவரது சகோதரரிடம் கடன் வாங்கி சிவகார்த்திகேயனைப் படிக்க வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் கலைத்துறையில் மிளிர முயற்சி செய்துகொண்டிருந்த காலத்தில், குடும்பத்தினர் அதில் பெரிய நாட்டம் கொண்டிருக்கவில்லை. ஆனால் இதனால் சிவகார்த்திகேயனுக்கு எப்போதும் அவர் அம்மா மீது வெறுப்போ கோபமோ உண்டானதில்லை என சில ஆண்டுகளுக்கு முன்னரான பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் அம்மா குறித்து அவரது சகோதரி கௌரி அவள் விகனுக்கு அளித்த பேட்டியில், "அப்பாவோட இழப்பால அம்மா நிலைகுலைஞ்சு போயிட்டாங்க. ஒரு வருஷம் அம்மாவால அந்த இழப்புல இருந்து மீள முடியல. அதுக்கப்புறம்தான், பிள்ளைங்க படிப்பு பாதிக்கப்படக்கூடாதுன்னு அவங்க மனசைத் தேத்திக்கிட்டாங்க. காலேஜ் ஃபைனல் இயர் படிக்கும்போது எனக்கு மாமா பையனோட திருமணம் நடந்தது. அப்பா, எங்களோட கல்யாணத்தை எப்படி பண்ணணும்னு ஆசைப்பட்டாங்களோ, அதேமாதிரி விமரிசையா பண்ணினாங்க அம்மா. " எனக் கூறியுள்ளார்.

இன்று 70 வயதாகும் சிவகார்த்திகேயனின் தாய், இப்போது அவருடன்தான் வசித்து வருகிறார். அவர்களுக்கு இடையிலான உறவு குறித்து பேசிய கௌரி, "அம்மா இப்போ தம்பிகூடத்தான் இருக்காங்க. `குலதெய்வம் கோயிலுக்குப் போகணும், திதி கொடுக்கணும்' இப்படி என்ன சொன்னாலும் அம்மா சொல்லிட்டா மறுபேச்சு கிடையாது." எனப் பேசியிருந்தார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும்'' - கரையானால் நிலைகுலைந்த குடும்பம்; நெகிழ வைத்த லாரன்ஸ்!

ஒரு ஏழைக் குடும்பம் சிட்டுக் குருவி போல பல ஆண்டுகளாகச் சேமித்த ஒரு லட்சம் ரூபாயை ஒரு டப்பாவில் போட்டு மண்ணில் புதைத்து வைத்தது.பின்னர் ஒரு தேவைக்காக அதை எடுத்துப் பார்த்த குடும்பத்தினர், பணம் முழுவதைய... மேலும் பார்க்க

Ajith: 'அவர் மிகவும் ஜாலியான, எளிமையான மனிதர்' - அஜித் குறித்து நெகிழும் தாமு

மத்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான (2025) விருதுகளைக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.நடிகர் ... மேலும் பார்க்க

Tamil Cinema : `கிடப்பில் இருக்கும் படங்களில் விரைவில் திரைக்கு வருவது எவை எவை?’

'மதகஜராஜா'வின் வெற்றி பல படங்களுக்கு கலங்கரை விளக்கமாக அமைந்துவிட்டது. பல்வேறு சிக்கல்களால் பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் படங்களை மீண்டும் வெளிக்கொண்டு வர தீவிர முயற்சிகள் நடந்துவருகின்றன. விக்ரம், ப... மேலும் பார்க்க

``அவர் செய்த உதவியை நான் மறந்தா? எனக்கு சாப்பாடு கூட கிடைக்காது..'' - தனுஷ் குறித்து ரோபோ சங்கர்

பாஸ்ஸர் ஜே எல்வின் இயக்கத்தில், ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘அம்பி’. இந்த படத்தில் அஸ்வினி சந்திரசேகர் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, மோக... மேலும் பார்க்க

Robo Shankar: "இனி அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சதுனு சொன்னாங்க; ஆனா..." - ரோபோ சங்கர் உருக்கம்

பாஸ்ஸர் ஜே எல்வின் இயக்கத்தில், ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘அம்பி’. இந்தப் படத்தில் அஸ்வினி சந்திரசேகர் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, ம... மேலும் பார்க்க

புதிய பாய்ச்சல்; புதிய கோணங்கள் - 2010-க்குப் பிறகான தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளிகள்

தமிழ் சினிமா இப்போது ரொம்பவும் மாறிவிட்டது. குறிப்பாக, ஓ.டி.டி தளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு தற்போது திரைப்படங்கள் மீதான மக்களின் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. அதற்கேற்ப படங்களின் கன்டென்ட்களும் மெ... மேலும் பார்க்க