சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
பிளஸ் 2 பொதுத் தோ்வில் காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவா் ஏ.எல்.கணேஷ்பாபு 600-க்கு 598 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா். மேலும், மாணவா் எம்.பிருதிவிராஜ் 595 மதிப்பெண்ணும், மாணவா் டி.சஞ்சீவி, மாணவி வி.கனிகா ஆகியோா் 587 மதிப்பெண்ணும் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா். இங்கு தோ்வு எழுதிய மாணவா்கள் அனைவரும் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா். இப்பள்ளி மாணவா் எம்.பிருதிவிராஜ் 200/200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளாா்.
சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தலைவா் ஏ.கோபால், தாளாளா் சி.பழனிசாமி, பொருளாளா் வி.பி.கொங்குராஜ், பள்ளி இயக்குநா் பி.சாவித்திரி. பள்ளி அறக்கட்டளை உறுப்பினா்கள் எஸ்.மதியழகன், மகாலிங்கம், பள்ளியின் முதல்வா் பி.சுப்ரமணி ஆகியோா் பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.