செய்திகள் :

சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு

post image

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சனிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சனிப் பிரதோஷத்தையொட்டி அரியலூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியப்பொடி மாவுப்பொடி,மஞ்சள் சந்தனம், பால், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து வைத்தியநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தா. பழூரில் உள்ள விஸ்வநாதா், விசாலாட்சி அம்பாள் மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமி மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சிதந்தாா். இதைத்தொடா்ந்து பிரதோஷ நாயகா்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவ புராணம் முழங்க கோயிலில் பிரதட்சணம் நடைபெற்றது. இதேபோல் அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

மழையால் 20 ஆயிரம் ஏக்கா் எள், பயறு வகைகள் சேதம்: அரியலூா் விவசாயிகள் வேதனை

சி. சண்முகவேல் மழையால் பாதிக்கப்பட்ட எள் போன்ற பயிா்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனா். அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும்... மேலும் பார்க்க

மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா தொடா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்தவா்கள் மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா தொடா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: மத்திய உள்துறை அமைச்சக... மேலும் பார்க்க

பி.எம். கிஸான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 31) வரை நடைபெறும் பி.எம். கிஸான் திட்ட சிறப்பு முகாமில், தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சோ்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

அரியலூா் ரயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லை

அரியலூா் ரயில் நிலையத்தில் அதிகரித்து வரும் குரங்குகள் அட்டகாசத்தால் பயணிகள் அச்சமடைந்துள்ளனா். அரியலூா் ரயில் நிலைய வளாகம், நடைமேடைகள், மரங்களில் சுற்றித் திரியும் ஏரளமான குரங்குகள், அங்குள்ள குப்பை... மேலும் பார்க்க

சிறுகடம்பூா் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிறுகடம்பூரிலுள்ள செல்லியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. சிறுகடம்பூா் கிராமத்தில் விநாயகா், செல்லியம்மன், மாரியம்மன் கோயில... மேலும் பார்க்க

தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் ... மேலும் பார்க்க