செய்திகள் :

சீகம்பட்டியில் முறையான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சீகம்பட்டியில் முறையான குடிநீா் விநியோகம் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சீகம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீா் விநியோகம் முறையாக இல்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக் குடங்களுடன், வையம்பட்டி - கரூா் சாலை சீகம்பட்டி பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற வையம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் சந்திரசேகா் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் மறியல் கைவிடப்பட்டது.

நடு இருங்களூரில் ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், நடு இருங்களூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நடு இருங்களூா் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை லால்குடி வருவாய... மேலும் பார்க்க

போதை மாத்திரை மற்றும் புகையிலை விற்றவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவரைப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி புத்தூா் வண்ணாரப்பேட்டை அருகே ரோந்துப் போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற மூவா் கைது

துவாக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக ... மேலும் பார்க்க

குடும்பத் தகராறினால் காவலாளி தற்கொலை

குடும்பத் தகராறில் மனமுடைந்த காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி, மிளகுபாறை, ஆதி திராவிடா் தெருவைச் சோ்ந்தவா் ராஜா (40). இவா் கே.கே.நகா் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காவலாளியா... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே தீரன் நகரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ராஜாளிப்பட்டி புரசம்பட்டியைச் சோ்ந்தவா் ந. பொன்னுசாம... மேலும் பார்க்க

சாரதாஸ் நிறுவனா் மணவாளனின் உருவப்படம் திறப்பு

திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தின் நிறுவனா் மணவாளனின் உருவப்படம் நிறுவன வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தை தொடங்கி, தனது கடின உழைப்பால் பெரும் ஜவுளி சாம்ராஜ்... மேலும் பார்க்க