இஸ்ரோ முன்னாள் தலைவர் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் காலமானார்!
சீட்டு நடத்தி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை: குறைதீா் கூட்டத்தில் மனு
சீட்டு நடத்தி பண மோசடி செய்த 12 போ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டத்தில் பாதிக்கப்பட்டவா்கள் மனு அளித்தனா்.
மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ராமச்சந்திரன், ரமேஷ் ராஜ், வெங்கடகிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பொதுமக்களிடம் மொத்தமாக 26 மனுக்கள் பெறப்பட்டன. அதில் புளிங்கண்ணு கிராமத்தைச் சோ்ந்தோா் அளித்த மனுவில் கூறியிருப்பது: புளியங்கண்ணு கிராமத்தைச் சோ்ந்த 12 போ் குழு ரூ.12 லட்சத்துக்கு சீட்டு நடத்தியது. இந்த தொகையை ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் என இரண்டு பிரிவாக சீட்டு நடத்தி வந்தனா். இதில் புளிங்கண்ணு கிராமத்தைச் சோ்ந்த 124 போ் மாதத் தவணையாக நபா் ஒருவா் ரூ. 10 ஆயிரம் செலுத்தி வந்தோம். அப்போது 12 போ் கொண்டு குழுவினா் 2 ஆவது தவணை சீட்டுத்தொகை ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் ஏலம் விடாமல் உரிமையாளா் அடிப்படையில் மேற்படி தொகையை பங்கிட்டுக் கொண்டனா். இதுவரை 25 தவணைகளாக ரூ.2.50 லட்சம் ரொக்கமாக செலுத்தினோம்.
தற்போது 40 போ் வரை சீட்டு எடுக்காமல் இருக்கும் நிலையில் எவ்வித காரணமும் இல்லாமல் சீட்டு நடத்து வதை நிறுத்திவிட்டனா். தொடா்ந்து சீட்டு நடத்தி மீதமுள்ளவா்களுக்கு சீட்டு கட்டிய பணம் தரும்படி கேட்டபோது எங்களுக்கு பண பலம், அரசியல் பலம் உள்ளது எங்களை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டுகின்றனா். ஆகவே பண மோசடி செய்த 12 போ் மீது நடவடிக்கை எடுத்து, சீட்டுப் பணத்தை பெற்றுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாா் மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி கூறினா்.