செய்திகள் :

சீனா: ஒன்றுகூடிய புதின், கிம், ஜின் பிங் - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

post image

சீனாவின் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து சீனா அமெரிக்காவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக பேசியுள்ளார், அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

அத்துடன் சீனாவின் சுதந்திரத்துக்காக ரத்தம் சிந்திய அமெரிக்கர்கள் நினைவுகூறப்படுவார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த அவரது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில், "கொஞ்மும் நட்பில்லாத அந்நியப்படையெடுப்பிலிருந்து சீனாவின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக மிகப் பெரிய அளவில் அமெரிக்கர்கள் ரத்தம் சிந்தி அளித்த ஆதரவை சீன அதிபர் குறிப்பிடுவாரா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.

ஜின்பிங் மற்றும் ட்ரம்ப்

சீனாவின் வெற்றிக்காகவும் மகிமைக்காகவும் பல அமெரிக்கர்கள் மரணமடைந்துள்ளனர். அவர்களின் துணிச்சல் மற்றும் தியாகத்திற்காக அவர்கள் சரியான முறையில் கௌரவிக்கப்படுவார்கள், நினைவுகூரப்படுவார்கள் என்று நம்புகிறேன்!" என எழுதியிருக்கிறார் ட்ரம்ப்.

அத்துடன், "அதிபர் மற்றும் அற்புதமான சீன மக்களுக்கு சிறந்த நீடித்த கொண்டாட்ட நாளாக இருக்கட்டும். அமெரிக்காவிற்கு எதிராக சதி நீங்கள் செய்துகொண்டிருக்கையில், விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என வஞ்சப்புகழ்ச்சியில் வாழ்த்தியுள்ளார்.

சீனாவின் ராணுவ அணிவகுப்பில் உலக தலைவர்கள்

சீனாவில் மா சே துங் தலைமையில் கம்யூனிஸ ஆட்சி உருவாவதற்கு முன்பு, கோமிண்டாங் கட்சியின் ஆட்சியில் இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் சீனாவை ஆக்கிரமிக்க முயன்றது. அப்போது அமெரிக்க ராணுவம் சீனாவுக்கு உதவியது. குறிப்பாக 'வைட் டைகர்ஸ்' என்ற விமானப்படை ஜப்பான் போர் விமானங்களை எதிர்த்து சண்டையிட்டது. இதில் பல அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். இந்த வரலாற்று நிகழ்வையே சுட்டிக்காட்டியுள்ளார் ட்ரம்ப்.

இரண்டாம் உலகப்போர் முடிவின் 80வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் சீனா மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது. இதில் கலந்துகொள்ள ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய அதிபர் கிம் உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்த அணிவகுப்பில் சீன ராணுவத்தின் பல ஆயுதங்கள் முதல்முறையாக பொதுமக்களுக்குக் காட்டப்பட்டன. 2019ம் ஆண்டு கம்யூனிஸ சீனா உருவானதன் 70வது ஆண்டு விழாவுக்குப் பிறகு சீனா நடத்தும் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்துக் குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்; செப்., 15-க்குள் அமல்படுத்த உத்தரவு!

திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், 2006 - 2011 ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, 2007 - 2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரின் ம... மேலும் பார்க்க

பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" - தேஜஸ்வி விமர்சனம்

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிரதமர் மோடி அவரது தாய் காங்கிரஸ், ஆர்.ஜே.டி பேரணியில் அவமதிக்கப்படதாகப் பேசியது ஒரு நாடகம் எனப் பேசியுள்ளார்.மோடியை விமர்சித்துப் பேசிய தேஜஸ்வி, "நம் எல்லோரு... மேலும் பார்க்க

NIRF அறிக்கை: "நாட்டின் தலைசிறந்த 17 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது" - ஸ்டாலின் பெருமிதம்!

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) வெளியிட்டுள்ள 2025ம் ஆண்டுக்கான தரவரிசையில் தமிழக கல்வி நிறுவனங்கள் முதலிடம் பிடித்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வ... மேலும் பார்க்க

அதிமுக-வின் சூப்பர் சீனியர்; எம்.ஜி.ஆர் - ஜெ காலத்து ரத்தத்தின் ரத்தம் - யார் இந்த செங்கோட்டையன்?!

முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன்அதிமுக-வுக்குள் மீண்டும் ஒரு வெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார். நாளை காலை 9 மணிக்கு மனம் விட்டுப் பேசப் போகிறேன் என தேதி நேரமெல்லாம் குறித்திருக்கிறார். எடப்பாடிக்கும்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "வெளிய போங்க; அதான் உத்தரவு" - பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் இன்று கூடியிருந்தனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். அப்போது... மேலும் பார்க்க