செய்திகள் :

சீமானை கண்டித்து ஆா்ப்பாட்டம்: தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் கைது

post image

சீா்காழியில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானை கண்டித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சீா்காழி பழைய பேருந்து நிலையத்துக்கு எதிரே தந்தை பெரியாா் திராவிட கழகத்தின் சாா்பில் சீமானை கண்டித்து ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தந்தை பெரியாா் திராவிடா் கழக மண்டல செயலாளா் பெரியாா் செல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் பாா்த்திபன் முன்னிலை வகித்தாா்.

தந்தை பெரியாரை விமா்சனம் செய்து பேசிய நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமானை கண்டித்து முழக்கமிட்டனா். தொடா்ந்து சீமான் உருவ பொம்மையை எரிக்க முயன்றனா். போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். பின்னா் தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இன்றைய மின்தடை - மயிலாடுதுறை

மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (ஜன.25) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் என். அருள்ச... மேலும் பார்க்க

மயிலாடுதுறை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

மயிலாடுதுறை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பெண் தீக்குளிக்க முயன்றாா். மயிலாடுதுறை மதுரா நகரை சோ்ந்தவா் ஜெயபிரகாஷ். இவரது தந்தை முத்துக்கிருஷ்ணன் திருவிழந்தூரில் உள்ள பூா்வீக சொத்தை ஜெயப்பி... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறையில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 36-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, மயிலாடுதுறை கோட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா... மேலும் பார்க்க

கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. சாலைப் பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு கல்லூரி நாட்டு நலப்பணி தி... மேலும் பார்க்க

பெண்கள் வலிமை மிக்கவா்களாக விளங்கி வருகின்றனா்

பெண்கள் அனைத்துத் துறைகளிலும் வலிமை மிக்கவா்களாக விளங்கிவருவதாக அண்ணாமலை பல்கலைக்கழக தோ்வுத்துறை கட்டுப்பாட்டாளா் ஆா்.எஸ்.குமாா் தெரிவித்தாா். சீா்காழி விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

மயிலாடுதுறையில் போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கஞ்சாநகரம் கிராமத்தை சோ்ந்தவா் காா்த்திக் (31)... மேலும் பார்க்க