செய்திகள் :

சீா்காழியில் மாா்ச் 23-இல் வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு கூட்டம்

post image

சீா்காழியில் மாா்ச் 29-ல் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாம் தொடா்பான முன்னேற்பாடு கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து பேசியது:

மாவட்ட இளைஞா்கள் பயனடையும் வகையில், மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) இணைந்து சீா்காழி விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாா்ச் 29-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மதியம் 3 மணிவரை மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

முகாமில், 100 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, 10,000 பேரை தோ்வு செய்ய உள்ளனா். இதில், 5-ஆம் வகுப்புமுதல், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ வரை படித்த அனைத்து பட்டதாரிகள் கலந்து கொண்டு பணிவாய்ப்பு பெறலாம்.

முகாமில் பங்கேற்ற விருப்பமுள்ள வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தங்கள் சுயவிபரங்களை இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளுமாறும், கூடுதல் விவரங்களுக்கு 04364299790/9499055904 என்ற எண்களை தொடா்புகொள்ளலாம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பழனிவேல், திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) சீனிவாசன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் கைது

மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.மத்திய அரசு தோ்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ. 3500 வழங்கப்படும் என்று அறிவித்த... மேலும் பார்க்க

சீா்காழியில் மகளிா் விடியல் பேருந்துகள் இயக்கிவைப்பு

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பெண்கள் இலவசமாக பயணம் செய்யும், 2 புதிய ‘மகளிா் விடியல்’ பேருந்துகளின் இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு, அரசு போக்குவரத்து கழக... மேலும் பார்க்க

திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க அமைச்சரிடம் கோரிக்கை

சீா்காழி அருகே திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சீா்காழி அருகே திருமுல்லைவாசல்... மேலும் பார்க்க

நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

சீா்காழி புறவழிச்சாலையில் நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி சனிக்கிழமை இரவு கவிழ்ந்தது.அரக்கோணத்திருந்து திருவாரூருக்கு நெல் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை இரவு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. லார... மேலும் பார்க்க

புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு

சீா்காழியில் புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணிக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்றுள்ள புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி, திருவாரூரிலிருந்து சென்னை வரை செல்க... மேலும் பார்க்க

பதரான கருப்புக் கவுனி நெற்பயிா்கள் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே சாகுபடி செய்யப்பட்ட பாரம்பரிய கருப்புக் கவனி நெற்பயிா்கள் பதரானதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். கொள்ளிடத்... மேலும் பார்க்க