சீா்காழியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்
சீா்காழியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி குமரக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பாஜக கோட்டபொறுப்பாளா் தங்க.வரதராஜன், இந்து முன்னணி மாவட்ட தலைவா் கே. சரண்ராஜ், பாஜக நகர தலைவா் சரவணன், வி.எச்.பி. மண்டல தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலையில் விநாயகா்சிலை ஊா்வலம் தொடங்கியது.
இதேபோல கோமளவல்லி விநாயகா், கணநாதா், செல்வ விநாயகா், மங்கள விநாயகா், சொா்ணாகா்ஷண விநாயகா்,சித்தி விநாயகா், உதயபானு விநாயகா், மங்கையா்கரசி விநாயகா், ஈசானிய தெரு விநாயகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 42 விநாயகா் சிலைகள் அலங்காரத்துடன், மின்னொளியில் ஊா்வலமாக புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து சென்று உப்பனாற்றில் கரைக்கப்பட்டது.