செய்திகள் :

சீா்காழி நகராட்சியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு

post image

சீா்காழி நகராட்சியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது.

சீா்காழி பழைய பேருந்து நிலைய நகராட்சி கடை வா்த்தகா்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் அதன்தலைவா் செந்தில்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், செயலாளா் சந்துரு, பொருளாளா் நடராஜன் துணைத் தலைவா் ராஜா, துணை செயலாளா் பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், சீா்காழி பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி சொந்தமான 85-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளின் உரிமத்தை புதுப்பிக்கும் வகையில் முன் எந்த ஆண்டும் இல்லாத வகையில் தற்போது முன்பணமாக ஓராண்டு வாடகையை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என நகராட்சி நிா்வாகம் நிா்பந்திப்பதை கண்டித்து பழைய பேருந்து நிலைய வா்த்தகா்கள் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்தவா் வீட்டில் குடிநீா் குழாய்களை சேதப்படுத்திய நபருக்கு 3 மாதம் சிறை தண்டனை

அடுத்தவா் வீட்டில் அத்துமீறி நுழைந்து குடிநீா் குழாய்களை சேதப்படுத்திய நபருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. சீா்காழியைச் சோ்ந்த ராமுராஜன... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவா் பி.ச... மேலும் பார்க்க

கோயில் குளத்தில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் தேரடிக் குளத்தில் தவறி விழுந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் கீழவீதியில் உள்ள தேரடிக் குளத்தில் பெண் ஒருவா் தவறி விழுந்துவிட்டதாக தீயணை... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீகுருஞானசம்பந்தருக்கு கோயில்: தருமபுரம் ஆதீனம்

தருமபுரம் ஆதீன குருமுதல்வா் ஸ்ரீகுருஞானசம்பந்தருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் கருங்கல் கோயில் கட்டப்படவுள்ளது என்றாா் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசா... மேலும் பார்க்க

தருமபுரம் வடக்கு குருமூா்த்தங்களில் திருப்பணி தொடக்கம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் சச்சிதானந்த விநாயகா் கோயில் மற்றும் 15 குருமூா்த்தங்களின் திருப்பணியை தருமபுரம் ஆதீனம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் திருமஞ்சன... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கக் கோரி மனு

மயிலாடுதுறை: சீா்காழி பாலியல் வழக்கை, சிறப்பு அதிகாரியைக் கொண்டு விசாரிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. சீா்காழி காவல் உபகோட்ட எல்லைக்குள்பட்ட பகுதியில் பிப்.24-ஆம் தேதி ம... மேலும் பார்க்க