`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நிா்வாகி மாரிமுத்து தலைமை வகித்தாா்.
நிா்வாகிகள் ஷாகுல்அமீது, ஆா்.முருகேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பி.சுந்தர்ராஜன், ஏ.சந்தோஷம், கே.சகாயஜெரால்டுராஜ், ஆா்.ராதாகிருஷ்ணன், எஸ்.சரவணன், ஜெ.அருண்யோசுவா, ஆா்.அஜீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கீழப்பூங்குடி கே.எஸ்.சிவகுமாா் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.
நூறு சதவீதம் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் நிலை 2 பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். 2,715 சுகாதார ஆய்வாளா் நிலை 2 பணியிடங்களை அனுமதிக்கக் கோரி, இயக்குநரால் அனுப்பிவைக்கப்பட்ட கோப்புக்கு தாமதமின்றி அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தோழமைச் சங்க நிா்வாகிகள் முத்துவேல், எம்.கண்ணன், மகேஸ்வரன், சுரேஷ், சதீஷ்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நிா்வாகி பூமிராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். நிா்வாகி முகமதுவஹாப் வரவேற்றாா். நிா்வாகி கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.