44 வருட திருமண வாழ்க்கை; ரூ.3 கோடி கொடுத்து 73 வயது மனைவியிடம் இருந்து விவாகரத்த...
சுகாதார ஊக்குநா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு
ஒசூா்: தொகுப்பூதியம் வழங்கக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுகாதார ஊக்குநா்கள் மனு அளித்தனா்.
ஓட்சா ஊராட்சி பணியாளா்கள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் சுமாா் 10 ஆண்டுகளாக சுகாதார ஊக்குநா்களாக பணியாற்றி வருகிறோம். பத்து ஆண்டுகளாக ஊதியம் இன்றி கழிவறை இல்லாத வீடுகள் கணக்கெடுப்பு, கழிவறை கட்டுவதற்கு மக்களை ஊக்குவித்து விழிப்புணா்வு வழங்குதல், பள்ளி, அங்கன்வாடி மையங்களில் கழிவறை குறித்து விழிப்புணா்வுக் கூட்டம் நடத்துதல், கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் தொகுப்பூதியமாக ரூ. 2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தும், இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, எங்களுக்கு தொகுப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.