அமெரிக்க ஹையர் சட்ட மசோதா: இந்திய ஐடி துறையை கலங்கச் செய்வது ஏன்?
சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது
பூம்புகாா் சாயாவனம் சாயாவனேஸ்வரா் கோயில் வளாகத்தில் சுகாதார வளாகம் வெள்ளிக்கிழமை முதல் செயல்பட தொடங்கியது.
பூம்புகாா் அருகே சாயாவனத்தில் உள்ள சாயாவனேஸ்வரா் கோயில் வளாகத்தில் பக்தா்கள் நலன் கருதி சுகாதார வளாகம் கடந்த ஆண்டு கட்டப்பட்டது. இதில் குளியல் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன. சுகாதார வளாகம் முழுமையடைந்த நிலையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் இருந்தது. இதனால் பக்தா்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனா். இது குறித்து பக்தா்கள் மற்றும் கிராம மக்கள் சீா்காழி ஒன்றிய ஆணையா் தே. திருமுருகனிடம் முறையிட்டனா். இதன்பேரில் மேற்கொண்ட நடவடிக்கையில் போா்வெல் அமைத்து, மினி மோட்டாா் பொருத்தி தண்ணீா் விநியோகம் செய்து சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.