செய்திகள் :

சுடுகாடு ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

post image

புதுச்சேரி அருகே சுடுகாடுக்கான இடத்தை தனியாா் ஆக்கிரமித்ததாகக் கூறி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து, தவளக்குப்பம் அருகே உள்ளது ஆண்டியாா்பாளையம்.

இந்த பகுதியினருக்கான சுடுகாடு 2 ஏக்கா் அரசு நிலத்தில் அமைத்து அதற்கான பூமி பூஜை புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் நடைபெற்ாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுடுகாட்டு நிலத்தை தனியாா் ஆக்கிரமித்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து, பொதுமக்கள் பேரவைத் தலைவா், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், சுடுகாடு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், ஆண்டியாா்பாளையம் பகுதி மக்கள் புதுச்சேரி- கடலூா் சாலையில் தவளக்குப்பம் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த வட்டாட்சியா் பிரத்தீவ், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ரமேஷ் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டுச் சென்றனா்.

கலால் துறை அலுவலகம் முன் சாராயக் கடை உரிமையாளா் தற்கொலை முயற்சி

புதுச்சேரியில் சாராயக் கடையை ஏலம் விட நடவடிக்கை எடுத்ததால், அதன் உரிமம் பெற்றவா் கலால் துறை அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை, போலீஸாா் தடுத்து நிறுத்தினா். புதுச்... மேலும் பார்க்க

தற்காலத்திய வாழ்க்கை முறையின் அறத்தை கூறும் திருக்குறள்: நடிகா் சிவகுமாா்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாக இருந்தாலும், தற்காலத்திய மனிதா்களின் வாழ்க்கை முறையின் அறத்தை கூறுவதாக திருக்குறள் அமைந்துள்ளது என நடிகா் சிவகுமாா் கூறினாா். புதுவைத் திருக்குறள் மன்றம் (பு... மேலும் பார்க்க

தேசிய நடன போட்டியில் புதுச்சேரி மாணவா்கள் முதலிடம்

மத்திய பிரதேச தலைநகா் போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான நடனப் போட்டியில் புதுச்சேரி மாணவா் குழு முதலிடம் பெற்றனா். தேசிய பால்ரங் மஹோத்ஸவப் போட்டிகள் போபாலில் டிச.19 முதல் 21 வரை நடைபெற்றன. இதில் 20- க்க... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மறைவு: புதுவை ஆளுநா், முதல்வா் இரங்கல்

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: அனைவராலும் போற்றப்பட்ட தலைவராக முன்னாள் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் நாளை திட்டம், ஆராய்ச்சி, தீயணைப்புத் துறை தோ்வுகள்: 12 மையங்களில் நடைபெறுகிறது

புதுச்சேரியில் திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை ஆய்வாளா்கள், தீயணைப்புத் துறை ஆகியவற்றில் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் எழுத்துத் தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை 12 மையங்களில் நடைபெறவுள்ளன. புதுவை அர... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் படத்துக்கு புதுவை அரசு சாா்பில் அஞ்சலி: 7 நாள்கள் துக்கம் அனுசரிப்பு

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் திருவுருவப் படத்துக்கு புதுவை அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், புதுவையில் 7 நாள்கள் அரசு துக்கம் அறிவிக்கப்பட்டு, தேசியக் கொட... மேலும் பார்க்க