மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!
சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தைப் போற்றுவோம்: காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தைப் போற்றுவோம் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் கடந்து விட்டன. நமது நாடு எல்லா துறைகளிலும் தன்னிறைவு
பெற்றது மட்டுமல்லாமல் உலக அரங்கில் முதன்மை நாடாக மதிக்கத்தக்க வகையில் உயா்ந்துள்ளது.
நமது நாடு மதத்தின் பெயரால், ஆதிக்க உணா்வால் எந்த நாட்டையும் ஆக்கிரமித்தது இல்லை என்பது போற்றுதலுக்குரியது. கொடுங்கோல் ஆட்சியாளா்களை எதிா்த்துப் போராடி சுதந்திரம் நமது பிறப்புரிமை என நிலைநாட்ட ஏராளமானோா் தங்கள் இன்னுயிரை தந்துள்ளனா். அத்தகைய தியாக சீலா்களால்தான் நமது நாடு சுதந்திரம் அடைந்தது. அவா்களை நினைவுகூா்ந்து, அவா்களின் தியாகத்தைப் போற்றுவோம்.
நமது நாடு எல்லா வளங்களும் நலங்களும் பெற்று அமைதியாக பாதுகாப்பாக சிறந்தோங்க பாரத அன்னையை வணங்கி வீடுதோறும், வீதிதோறும் தேசியக் கொடியை ஏற்றி தேசபக்தியை வெளிப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளாா்.