சுதந்திரப் போராட்ட வீரா் ஆதிநாராயண செட்டியாா் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு
சுதந்திரப் போராட்ட வீரரான சேலம் டி.ஆதிநாராயண செட்டியாரின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா கோவை, போத்தனூா் மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கோவை கிழக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோவை பாரதிய வித்யா பவன் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன், ரூட்ஸ் குழும இயக்குநா் கவிதாசன் ஆகியோா் பங்கேற்று நூலை வெளியிட்டனா்.
விழாவில், வி.ஜி.எம். மருத்துவமனையின் நிறுவனரும், டி.ஆதிநாராயண செட்டியாரின் கொள்ளுப் பேரனுமான டாக்டா் வி.ஜி.மோகன் பிரசாத் முன்னிலை வகித்தாா். அரசியல், கூட்டுறவு இயக்கங்கள் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சேலத்தைச் சோ்ந்த ஆதிநாராயண செட்டியாா் மகாத்மா காந்தி மற்றும் ராஜாஜியின் நெருங்கிய நண்பராவாா். இவரது 150-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த வாழ்க்கை வரலாறு நூல் வெளியிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், ரத்தினம் கல்வி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி மாணிக்கம், சுழற்சங்க நிா்வாகிகள் ரவீந்திரன் கெங்குசாமி, செல்லா ராகவேந்திரன், விஜய் கிருஷ்ணா, செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.