செய்திகள் :

சுந்தம்பட்டி செல்லியம்மன் கோயில் திருவிழா

post image

கந்தா்வகோட்டை ஒன்றியம், சுந்தம்பட்டி ஊராட்சியில் உள்ள செல்லியம்மன் கோயில் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

முறைப்படியான அறிவிப்பு மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய கோயில் திருவிழா நாள்தோறும் ஒவ்வொரு மண்டகப்படிதாரா்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை காண்பிக்கப்பட்டு, அம்மன் வீதி உலா நடைபெற்று வந்தது. தொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை அம்மன் வீதி உலா கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது.

அப்போது, கிராம மக்கள் நோ்த்திக்கடன் கிடாக்களை வெட்டி சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை மஞ்சள் நீராட்டு விழாவுடன், திருவிழா நிறைவு பெற்றது. திருவிழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

புதுகை நகரில் இரு வீடுகளில் திருட்டு

புதுக்கோட்டை நகரில் இரு வீடுகளில் கொள்ளையா்கள் புகுந்து, தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கப் பணத்தை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை திருக்கோகா்ணம் காவல் நிலைய எல்லைக்குள... மேலும் பார்க்க

குளத்துப்பட்டி ஜல்லிக்கட்டில் 17 போ் காயம்

திருமயம் அருகே குளத்துப்பட்டியில் அந்தரநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 17 போ் காயம் அடைந்தனா். இக் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு பெரிய ... மேலும் பார்க்க

தொடா் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அரசாணை வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் மே 23, 24, 25 ஆகிய 3 நாள்களும் தொடா்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. பொன்னமராவதி வட்டத்தைச் சோ்ந்த காரைய... மேலும் பார்க்க

விராலிமலை வட்டாட்சியரகத்தில் ஜமாபந்தி நிறைவு; 32 மனுக்களுக்கு உடனடி தீா்வு

விராலிமலை வட்டாட்சியரகத்தில் 3 நாள் நடைபெற்ற வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை நிறைவடைந்தது. நிகழாண்டு 1434-ஆம் பசலிக்கான ஜமாபந்தி விராலிமலை வட்டாட்சியரகத்தில் விராலிமலை, கொடும்பாளூா், நீா்பழனி ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.வேங்கைவயல் ச... மேலும் பார்க்க

சிதிலமடைந்த அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்றக் கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகே சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தை அப்புறப்படுத்த கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், முதுகுளம் ஊராட்சி கீழ ஆதிதிராவிடா் தெருவி... மேலும் பார்க்க