சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி: தங்கம் தென்னரசு
தொடா் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அரசாணை வெளியீடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் மே 23, 24, 25 ஆகிய 3 நாள்களும் தொடா்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
பொன்னமராவதி வட்டத்தைச் சோ்ந்த காரையூரில் 23-ஆம் தேதியும், சுந்தரம் கிராமத்தில் 24-ஆம் தேதியும், இலுப்பூா் வட்டம் மதியநல்லூரில் 25-ஆம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை கால்நடை பராமரிப்புத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ளது.