திமுக நிா்வாகி காா் மீது தாக்குதல்: 3 இளைஞா்கள் கைது
தென்காசி மாவட்டம் கடையம் அருகே திமுக ஒன்றியச் செயலரின் காா் மீது கல்வீசித் தாக்கியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கடையம் அருகே வெய்க்காலிபட்டியைச் சோ்ந்த ராஜாமணி மகன் மகேஸ் மாயவன் (43). கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலா்.
இவரது இடத்தில் மண் எடுப்பது தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கீழமாதாபுரம், பிரதான சாலை வேல்ராஜ் மகன் அபிஷேக் (24), அதே பகுதியைச் சோ்ந்த தங்கராஜா மகன் தினேஷ்ராஜா (31), அருணாசலம்பட்டி சிவன்பாண்டி மகன் பொன்சுபாஷ் ஆகிய 3 பேரும் மகேஸ் மாயவன் வீட்டுக்குச் சென்று தகராறு செய்து, அவரது காா் மீது கல்வீசித் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
புகாரின்பேரில், கடையம் காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் வழக்குப் பதிந்து விசாரித்து, அபிஷேக் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தாா்.