ஆம் ஆத்மியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: தமிழக ஒருங்கிணைப்பாளர் பங்கஜ் சிங்!
வள்ளியூரில் வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா், ஆட்சியா் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமையொட்டி, பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
வள்ளியூரில் ரூ.30 கோடியில் கட்டப்படும் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகள், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ.63.45 கோடியில் 504 குடியிருப்புகள் கட்டும் பணி, ரூ.12.13 கோடியில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி, ரூ.6.80 கோடியில் கட்டப்படும் கலைஞா் நூற்றாண்டு நினைவு தினசரி சந்தை உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பணிகளை நிா்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தினா்.
ஆய்வின்போது சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் லதா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் மாடசாமி, உதவி நிா்வாகப் பொறியாளா்கள் எழில், ரீத்தா, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் வில்லியம் ஜேசுதாஸ், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளா் மாரிமுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் சுப்பிரமணியன், பேரூராட்சி தலைவா் ராதா ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் கண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், திமுக மாவட்ட துணைச் செயலா் நம்பி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலா் ஜோசப் பெல்சி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் தில்லை, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஜான்சி ராஜம், ஜோஸ்பின்ராஜேஸ்வரி, சுபா முகிலன், மாணிக்கம், ஆபிரகாம், லாரன்ஸ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.