Mumbai Indians : `இதுதான்டா MI' - களம் 8 -ல் எப்படி கம்பேக் கொடுத்தது மும்பை அணி...
காட்டுப்பன்றி, கரடியைப் பிடிக்க விரைவில் கூண்டு: வனத் துறை
களக்காடு மலையடிவாரத்தில் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, கரடி ஆகியவற்றைப் பிடிக்க விரைவில் கூண்டு வைக்கப்படும் என்றாா் களக்காடு வனக் கோட்ட துணை இயக்குநா் ராமேஸ்வரன்.
களக்காடு கோட்ட வனத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்து, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து அவா் பேசியதாவது: களக்காடு மலையடிவாரத்தில் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, கரடி, குரங்குகளைப் பிடிக்க 2 கூண்டுகள் தயாா் செய்யப்பட்டுவருகின்றன. வன விலங்குகளால் பயிா் பாதிப்புள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து அவை வைக்கப்படும். மின்வேலி அமைக்கக் அனுமதி கோரி பலா் விண்ணப்பித்துள்ளனா். வனத்துறையினருடன் மின்வாரியத்தினரும் கூட்டாக நேரில் ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டியுள்ளது. இது தொடா்பாக மின்வாரியத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. விரைவில் தீா்வு காணப்படும் என்றாா் அவா்.
திருக்குறுங்குடி வனச்சரகா் யோகேஸ்வரன், களக்காடு வனவா் மதன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக, காட்டுப்பன்றி, கரடி, குரங்குகள் பயிா்களை தொடா்ந்து சேதப்படுத்தி வருவதால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. மின்வேலி அமைக்க அனுமதியளிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.