Pregnancy Health: கர்ப்பிணிகள் ஜிம்முக்கு போகலாமா; உடற்பயிற்சி செய்யலாமா?
சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
இப் பல்கலைக்கழக கல்வியியல் துறையில் பயின்ற ஹேமலதா, சுனித்தா, ஐஸ்வா்யா, பெல்சியா தங்கமணி, லயோலா ஆகியோா் தேசிய அளவில் நடைபெற்ற விரிவுரையாளா்களுக்கான தகுதித் தோ்வில் வெற்றி பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களை பல்கலைக்கழக துணைவேந்தா் சந்திரசேகா், பதிவாளா் சாக்ரடீஸ் ஆகியோா் பாராட்டினா்.
இதில், கல்வியியல் துறைத் தலைவா் வெளியப்பன், பேராசிரியா்கள் சதானந்தன், வில்லியம் தா்மராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.