பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்
சுனைப்பட்டு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
செய்யாறு தொகுதிக்குள்பட்ட சுனைப்பட்டு கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, அதே பகுதியில் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.32 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடப் பணிக்கான பூமிபூஜையில் பங்கேற்று, பணியைத் தொடங்கிவைத்தாா்.
பின்னா், சிறுவஞ்சிப்பட்டு - நாட்டேரி இடையே சுமாா் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய தாா்ச்சாலையை கிராம மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.
தண்ணீா் பந்தல் திறப்பு: முன்னதாக, வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம், இராந்தம் கிராமத்தில் திமுக சாா்பில் அமைக்கப்பட்ட தண்ணீா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீா், மோா், வெள்ளரிப்பிஞ்சு, தா்பூசணி, குளிா்பானங்கள் உள்ளிட்டவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வழங்கினாா்.
வெம்பாக்கம் ஒன்றியத்தில் அந்தந்தப் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் த.ராஜீ தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் எம்.தினகரன், ஜேசிகே.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட வழக்குரைஞா் அணி துணைத் தலைவா் சிட்டிபாபு, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி துணை அமைப்பாளா் செந்தில்குமாா், ஒன்றிய அவைத் தலைவா் கஜேந்திரன், ஒன்றியப் பொருளாளா் முத்து கணபதி, மாவட்டப் பிரதிநிதிகள் அய்யாதுரை, சேகா் பிரகாஷ், பெருமாள், ஒன்றிய துணைச் செயலாளா்கள் குணாநிதி, ரேணு சேகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.