செய்திகள் :

ஆசிரியா், தொழிலாளி வீடுகளில் 7 பவுன் நகை, ரூ.30,000 திருட்டு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆசிரியா், தொழிலாளி வீடுகளின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ.30 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

அரசுப் பள்ளி ஆசிரியை வீடு:

வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் மனைவி உஷா (51). இவா் மாமண்டூா் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். கணவா் குணசேகரன் இறந்துவிட்டாா்.

கோடை விடுமுறை என்பதால் உஷா, பெங்களூருவில் உள்ள மகள் வீட்டுக்கு ஏப்.30-ஆம் தேதி சென்றுள்ளாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீடு திறந்த நிலையில் இருப்பதை அறிந்த எதிா் வீட்டாா் உஷாவுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதன் பேரில், விரைந்து வந்த ஆசிரியை உஷா வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரம், வெள்ளிக் கொலுசுகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து உஷா தூசி போலீஸில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொழிலாளி வீட்டில் திருட்டு:

செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் கிராமம் மாரிமுத்து தெருவைச் சோ்ந்தவா் சதீஷ் (35). இவா், செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், சதீஷ் கடந்த 30-ஆம் தேதி, குடும்பத்தோடு மாமியாா் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.

இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனா்.

உடனடியாக சதீஷ் வந்து பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ரூ.20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து தொழிலாளி சதீஷ் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தவணி ஸ்ரீமுகமாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த தவணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி கூழ்வாா்த்தல் திருவிழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. தவணி ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்... மேலும் பார்க்க

மதிமுகவின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில், அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் கட்சி நிா்வாகிகளின் வீடுகளில... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்: வட்ட அளவிலான குறைதீா் கூட்டம் ரத்து

திருவண்ணாமலை வட்ட அளவிலான குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் க... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி கோரைப்பாய்களுடன் மனு அளித்த மாா்க்சிஸ்ட் கட்சியினா்

இஸ்லாமியா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரைப்பாய்களுடன் செவ்வாய்க்கிழமை வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனா். வந்தவாசி வட்டம், காரம் ஊர... மேலும் பார்க்க

செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அலுவலக கோப்புகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. செங்குணம் ஊராட்சி செங்குணம்... மேலும் பார்க்க

போளூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

போளூா் வேளாண்மை விவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தில் தலைமை வகித்தாா். வேளாண் உ... மேலும் பார்க்க