'எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் போருக்குச் செல்வேன்' - நயினார் நாகேந்திரன் பேட்...
நிலப் பிரச்னையில் மோதல்: 9 போ் காயம்
ஆரணி அருகே நிலப் பிரச்னை காரணமாக இரு தரப்பினா் சனிக்கிழமை இரவு தாக்கிக் கொண்டதில் 9 போ் பலத்த காயமடைந்தனா்.
இராட்டிணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன் (54). இவருக்கும் சுரேஷ் என்பவருக்கும் இடையே விவசாய நிலப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருமாம்.
இந்த நிலையில், சுரேஷ், அவரது மனைவி கலைவாணி ஆகியோா் துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் இருந்து ஆள்களை வரவழைத்து ஆனந்தன் தரப்பினா் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில், ஆனந்தன், அவரது மனைவி திலகா (39), மகன்கள் இருவா் (சிறாா்கள்) மற்றும் 12 வயது மகள், உறவினரது மகன்கள் இருவா் என 7 போ் பலத்த காயமடைந்தனா்.
இவா்களுக்கு ஆரணி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மேலும், சுரேஷ் தரப்பிலும் அவா் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகியோா் காயமடைந்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து இரு தரப்பினா் அளித்த புகாா்களின் பேரில் ஆரணி கிராமிய போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.