Top News : பிரதமர் மோடியின் தமிழ்நாடு விசிட் டு முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் | ஜ...
சுபான்ஷு சுக்லா சாதனையால் விண்வெளி ஆராய்ச்சியில் குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி
சுபான்ஷு சுக்லா சாதனையால் விண்வெளி ஆராய்ச்சியில் குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 124-ஆவது பதிப்பில் இம்மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்றைய நாளில்(ஜூலை 27) பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘2047-இல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய வழியில் சுயசார்புத்தன்மையும் உள்ளூர் மக்களுக்கான முக்கியத்துவமும் இடம்பெறுவது அவசியமாகிறது’ என்றார்.
மேலும், அவர் பேசுகையில், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியாவின் சுபான்ஷு சுக்லாவை வெகுவாகப் பாராட்டியதுடன், விண்வெளித் துறை மீதான ஆர்வம் குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விண்வெளித் துறையில் 200-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் இன்றைய காலகட்டத்தில் உருவெடுத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.