கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
'சுமோ' ஓடிடி வெளியீடு!
‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள சுமோ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் எஸ்.பி.ஹோசிமின் - நடிகர் சிவா ஆகியோரின் கூட்டணியில் உருவான படம் ‘சுமோ’. பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டு வந்தது.
நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், பிரியா ஆனந்த், சதீஷ், விடிவி கணேஷ், யோகி பாபு, மற்றும் யோஷினோரி டஷிரோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படம் பிரபல இயக்குநர் ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.
நீண்டகால தாமதத்துக்கு பின்னர், கடந்த ஏப் 25 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றன.
இந்நிலையில், இந்தப் படம் நாளை (மே 23), சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிக்க:‘மெட்ராஸ் மேட்னி’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!