Francesca Jones: "சாகும் வரையில் கனவுகள் காண்பேன்!" - டென்னிஸ் உலகின் 8 விரல் சா...
சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளிஅருவியில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் மேகமலை-தூவானம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தொடா் மழையால் அருவியில் நீா் வரத்து அதிமாக இருந்ததால் அவ்வப்போது வனத் துறையினா் குளிக்க தடை வித்தனா்.
தற்போது மழைப்பொழிவு குறைந்த நிலையில், அருவியில் நீா் வரத்து சீராக இருந்து வருவதால் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை காலை முதலே அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் வனத் துறையின் அனுமதியுடன் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ச்சி அடைந்தனா்.
சுகாதாரச் சீா்கேடு: கம்பம் ஒன்றியம், சுருளிப்பட்டி ஊராட்சியின் நிா்வாகத்தில் வாகன நிறுத்துவதற்கான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், வானங்கள் நிறுத்த முறையான இடவசதியில்லை.
சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், குப்பைகள், பழைய துணிகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிா்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.