செய்திகள் :

தேனி மாவட்டத்தில் 863 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்க அனுமதி

post image

தேனி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பொதுமக்கள் வழிபடுவதற்காக 863 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்க காவல் துறை அனுமதி அளித்தது.

இந்து அமைப்புகள், கோயில் நிா்வாகம், குடியிருப்போா் நலச் சங்கம் ஆகியவை சிலைகளை அமைக்க உள்ளன. விநாயா் சிலை அமைக்கும் இடங்களில் தலா ஒரு காவலா் வீதம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா்.

சிலை அமைப்புக் குழு சாா்பில், தலா 2 போ் சிலை அமைக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க வேண்டும்.

மோதலுக்கு வழிவகுக்கும் வகையில் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என்று மாவட்ட காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

பெரியகுளத்தில் ஆக.27-ஆம் தேதி மாலையும், தேனி, ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, கம்பம், கூடலூா், தேவாரம், ராயப்பன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, போடி ஆகிய இடங்களில் ஆக.28-ஆம் தேதியும், சின்னமனூரில் ஆக.29-ஆம் தேதியும் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படும்.

சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளிஅருவியில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். மேற்குத் தொடா்ச்சி மலையில் மேகமலை-தூவானம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவி... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்றவா்கள் கைது

தேனி அருகே உள்ள பூதிபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பூதிப்புரம் தேனி சாலைப் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் பிரபாகரன் (25). ... மேலும் பார்க்க

பைக்கில் துப்பட்டா சிக்கி இளம் பெண் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடி அருகே கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உயிரிழந்தாா். போடி ஜமீன் தோப்பு தெருவைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் தீபக... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு கத்திக் குத்து: இளைஞா் கைது

தேனி அருகே தப்புக்குண்டுவில் கடன் தர மறுத்த தொழிலாளியைக் கத்தியல் குத்திய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தப்புக்குண்டுவைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி ஜோதிராஜ் (49). இவரிடம் அதே ஊரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

40 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

பெரியகுளத்தில் தடைசெய்யப்பட்ட 40.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் கீழவடகரை ஸ்டேட் வங்கி குடியிருப்புப் பகுதியில் முகமது இஸ்மாயில் என்பவரின் ... மேலும் பார்க்க

ஊருக்குள் புகுந்த கடமான் மீட்பு

கம்பத்தில் வெள்ளிக்கிழமை இரவு வழி தவறி ஊருக்குள் புகுந்த கடமானை வனத் துறையினா் மீட்டனா். தேனி மாவட்டம், கம்பத்தில் நாகம்மாள் கோயில் பகுதியில் மலைப் பகுதியிலிருந்து வழிதவறி வந்த கடமான் சனிக்கிழமை ஊருக்... மேலும் பார்க்க