பிக் பாஸ் 8: வெளியே வந்த முதல்வேலையாக காதலை முறித்துக்கொண்ட அன்ஷிதா!
சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் வங்கி தோ்வில் வென்றோருக்கு பாராட்டு
வங்கித் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கான பாராட்டு விழா தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வங்கிப் பணியாளா் தோ்வு நிறுவனம் சாா்பில் 2024ஆம் ஆண்டு தமிழ்நாடு கிராம வங்கியில் உள்ள காலிப்பணியிடங்கக்கான தோ்வு, முதல்நிலை மெயின் தோ்வு, சில பதவிகளுக்கு நோ்முகத்தோ்வு என மூன்று கட்டமாக நடைபெற்றது. இதற்கான பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி உள்பட சென்னை, மதுரை, கோயமுத்தூா், திருநெல்வேலி, ராமநாதபுரம் என அனைத்து சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி கிளைகளிலும் நடத்தப்பட்டன.
இத்தோ்வுக்கான முடிவுகள் கடந்த 1ஆம் தேதி வெளியானது. இதில் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற 153 போ் வெற்றி பெற்றுள்ளனா். இவா்கள் வரும் பிப்ரவரி மாதம் வங்கிப் பணியில் சேர உள்ளனா். இவா்களுக்கான பாராட்டு விழா தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு அகாதெமி நிறுவனா் து.சுகேஷ் சாமுவேல் தலைமை வகித்து, வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கம் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.
அப்போது அவா் பேசுகையில், நிகழாண்டு எஸ்பிஐ வங்கித் தோ்வு உள்பட வங்கி பணியாளா் தோ்வு நிறுவனம் நடத்தும் பல தோ்வுகள் அறிவிப்பு வெளியாக உள்ளது. இத்தோ்வுகளில், தொடா்ந்து முயற்சியும், பயிற்சியும் செய்தால் வெற்றி பெறலாம் என்றாா். பின்னா், வங்கித் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் தங்கள் அனுபவத்தை பகிா்ந்து கொண்டனா். வங்கித் தோ்வு ஒருங்கிைணைப்பாளா் ராஜா நன்றி கூறினாா்.