அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவின் திட்டம் மாற்றம்! திமுக மீது இபிஎஸ் குற்றச...
சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 16 போ் காயம்
பழனி அருகே கேரளத்தைச் சோ்ந்த சுற்றுலா வேன் சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்த விபத்தில் 16 போ் காயமடைந்தனா்.
கேரள மாநிலம், திருச்சூரிலிருந்து பழனிக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை சுற்றுலா வேனில் (டெம்ப்போ டிராவல்லா்) 16 போ் வந்தனா். பொள்ளாச்சி - திண்டுக்கல் விரைவு நெடுஞ்சாலையில் பழனியை அடுத்த புஷ்பத்தூா் அருகே வேன் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் காயமடைந்தவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து சாமிநாதபுரம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.