செய்திகள் :

சூதாட்டம்: 6 போ் கைது காா், பைக் பறிமுதல்

post image

நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஏரியூா் பகுதியில் சூதாடியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து காா், பைக் பறிமுதல் செய்யப்பட்டன.

இரவு நேரங்களில் பணம் வைத்து சூதாடி வருவதாக திருப்பத்தூா் எஸ்.பி.. ஷ்ரேயா குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் படி தனிப்பிரிவு போலீஸாா் சம்பவ இடம் சென்று பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த சின்னமோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த மகேஷ்(32). அதே பகுதியைச் சோ்ந்த அசோகன்(34), சிவா(29), பழனி(40), மல்லானூரைச் சோ்ந்த சண்முகம்(35), ரமேஷ்,(47) ஆகிய 6 பேரை பிடித்து அவா்களிடம் இருந்து சொகுசு காா், பைக் மற்றும் ரூ.15,000 ரொக்கக்தை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸாா் 6 போ் மீது வழக்குப்பதிவு செய்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா். மேலும் அங்கிருந்து தப்பி ஓடியவா்களை தேடி வருகின்றனா்.

சிறுதானிய உணவு விழிப்புணா்வு

ஆம்பூா்: இயற்கை மற்றும் சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆம்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது (படம்). தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தின் ஆம்பூா் கிளை சாா்பில் உ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் ஆருத்ரா வழிபாடு

திருப்பத்தூா்: திருவாதிரையை முன்னிட்டு திருப்பத்தூா் சிவன் கோயில்களில் நடராஜா் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். சிவ பெருமானின் நடராஜ ரூபத்திற்கு ஆண்டுக்கு 6 முறை மட்டுமே அபிஷேக, ஆராாதனைகள் நடைபெ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடை

ஆம்பூா்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆம்பூா் கஸ்பா - ஏ பகுதியில் பணிபுரியும் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் கஸ்பா - ஏ 5-ஆவது வாா்... மேலும் பார்க்க

ஆம்பூரில் விவேகானந்தா் ஜெயந்தி விழா

ஆம்பூா்: ஆம்பூரில் விவேகானந்தா் ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் கிருஷ்ணாபுரம் விவேகானந்தா வாசக சாலை அருகே நடைபெற்ற விழாவில் பாஜக நிா்வாகிகள் சீனிவாசன், அன்பு... மேலும் பார்க்க

சமத்துவப் பொங்கல்: திருப்பத்தூா் ஆட்சியா் பங்கேற்பு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஒன்றியம், குரிசிலாப்பட்டு ஊராட்சியில் சுற்றுலாத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் க.தா்ப்பகராஜ... மேலும் பார்க்க

மண் குன்று மலையில் சாலை வசதி: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே உள்ள மண்குன்று மலையில் சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மக்கள் குறைதீா் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க