செய்திகள் :

சூதாட்ட நிறுவனங்கள் தான் திமுக அரசுக்கு முக்கியமா?: ராமதாஸ் கேள்வி

post image

திருச்சி அருகே 27 வயது இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது?, சூதாட்ட நிறுவனங்கள் தான் திமுக அரசுக்கு முக்கியமா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்ற 27 வயது இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கனகராஜ் மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார்.அவருக்கு 9 மாதங்களுக்கு முன்பு தான் திருமணமாகியிருக்கிறது. மகிழ்ச்சியுடன் வாழ வேண்டிய இளைஞரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளியிருக்கிறது என்றால் ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு மோசமானது? என்பதை அனைவரும், குறிப்பாக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முடிவு கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த 2023 ஆண்டு நவம்பர் 9-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட 25-ஆம் நபர் கனகராஜ் ஆவார். 2025-ஆம் ஆண்டு ஆண்டு பிறந்து 3 மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் இதுவரை 8 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

வேலை... வேலை... வேலை... அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்கள் அறிவிப்பு!

பாமக நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்டது. ஆனாலும், அந்தத் தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதன் காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழி சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து பல குடும்பங்கள் வீதிக்கு வருவதைத் தடுப்பதும், தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதும் தான் அரசின் பணியாக இருக்க வேண்டும். ஆனால், அந்தக் கடமையை செய்ய தமிழக அரசு தவறி விட்டது. தமிழக அரசு நினைத்திருந்தால் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஆன்லைன் சூதாட்டத்தடை வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரச் செய்து தடை பெற்றிருக்க முடியும்.

ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து திமுகவினரை காப்பாற்றுவது தொடர்பான வழக்குகளை எல்லாம் விரைவுபடுத்தும் திமுக அரசு, இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டுவதை வைத்துப் பார்க்கும் போது மக்கள் நலனை விட ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நலனைத் தான் முக்கியமாக நினைக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது. உறுதியான நடவடிக்கைகளின் மூலம் இந்த ஐயத்தைப் போக்க வேண்டியது திமுக அரசின் கடமையாகும்.

தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 25 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஒடிசாவில் 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலி!

ஒடிசா மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலியாகியுள்ளனர். ஒடிசாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2025 வரையிலான 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலியானதாக அம்மாநில வருவாய்... மேலும் பார்க்க

ஆப்கனில் தொடர் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 160 கி.மீ. ஆழத்தில் இன்று (மார்ச் 27) காலை 8.38 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகி... மேலும் பார்க்க

சென்னை எழும்பூர் ரயில் நிலைய அலுவலகத்தில் தீ விபத்து!

சென்னை எழும்பூர் ரயில் நிலைத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலைத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் முதல் மாடியில் இன்று(மார்ச் 27) ப... மேலும் பார்க்க

சிலி அதிபர் இந்தியா வருகை!

சிலி நாட்டு அதிபர் 5 நாள் பயணமாக இந்தியா வருகின்றார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று தென் அமெரிக்க நாடான சிலியின் அதிபர் கேப்ரியல் போரிக் ஃபொண்ட் 5 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாக இந்... மேலும் பார்க்க

'இபிஎஸ் அவராகவே பதவி விலக வேண்டும்; இல்லையென்றால்...' - ஓபிஎஸ் எச்சரிக்கை!

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அவராகவே பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அமமுக சார்பில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு த... மேலும் பார்க்க

அடையாளத்தின் அடிப்படையில் 6 பயணிகள் சுட்டுக்கொலை! பிரதமர் கண்டனம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மர்ம கும்பலின் துப்பாக்கிச் சூட்டில் 6 பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். பலூசிஸ்தானின் குவடார் மாவட்டத்தின் கலாமத் பகுதியில் நேற்று (மார்ச் 26) நள்ளிரவு கராச்சியிலிருந்த... மேலும் பார்க்க