சூர்யா படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான்
சூர்யாவின் 45ஆவது படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான் நடிக்கிறார்.
நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்றத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், த்ரிஷா, ஸ்சுவாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி, சிவதா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
படத்தை இயக்குவதுடன் ஆர். ஜே. பாலாஜியும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் படத்தில் தற்போது மேலும் ஒரு வில்லன் இணைந்துள்ளதாகத் தெரிகிறது.
சித்தா பட இயக்குநர் அருண் குமாருக்கு திருமணம்!
90 காலகட்டங்களில் வில்லன் வேடத்தில் மிரட்டிய மன்சூர் அலிகான்தான் அந்த வில்லன்.
கடந்த சிலநாள்களாக இவர் நடிக்கும் காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். மன்சூர் அலிகான் இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.